அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, July 23, 2020

#எத்தனை #வண்ணமடி-

#எத்தனை #வண்ணமடி- 

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

எத்தனை எத்தனை வண்ணமடி
எழிலாய் இயற்கையில் காணுதடி!

🎋#பச்சை நிறத்தில் பசும் புற்கள்
பனித்துளி தாங்கி வணங்குதடி!

🌨மேகம் சூழ்ந்த வானத்தின்
மேனி நிறமே #நீலமடி!

🍋சிட்ரிக் அமிலம் சுமந்திருக்கும்
சிறிய எலுமிச்சை #மஞ்சளடி!

🍅தகதக வென்று #சிவப்பாக
தக்காளிப் பழமே ஜொலிக்குதடி!

🍳ஏழுநிறத்தில் அடங்காத
எழில் தரும் கூந்தல் #கருமையடி!

🥛நிறமே இல்லாத் தண்ணீரோ
உறைந்தால் #வெண்மையாகுமடி!

🌈ஏழுநிறத்தின் கலவையிலே
எண்ணற்ற வண்ணம் தோன்றுதடி!

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

தஞ்சாவூர் பொம்மை
🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶

தஞ்சாவூர் பொம்மையாம்

தலையாட்டும் பொம்மையாம்

அடிபெருத்த பொம்மையாம்

ஆடி ஆடி ஓயுமாம்

தஞ்சாவூர் பொம்மையைத்

தள்ளிக் கீழே விட்டாலும்

தள்ளாடி ஆடுமாம்

தலைநிமிர்ந்து நிற்குமாம்

அழுதபிள்ளை வாய்மூட

அம்மாவுக்கு உதவுமாம்

அறிவியலைப் புகட்டிட

ஆசானுக்கும் உதவுமாம்!

சாய்ந்து சாய்ந்து ஆடியே

சரியாய்த் தானே அமருமாம்

சமநிலையைப் போதிக்க

சான்றான பொம்மையாம்.
🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶

No comments:

Post a Comment