அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

Tuesday, July 14, 2020

கல்வி திட்டம்

நாளை முதல் தமிழக
கல்வித்துறையில் செயல்பட இருக்கும் மூன்று திட்டங்கள்..
முழு விவரம்..

வரும் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு செல்லக் கூடிய அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன . இதற்காக 3 கோடிக்கும் அதிகமான பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .

இந்த திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைக்கிறார். அதேபோன்று கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டமும் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது .

மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பாட பொருள்களை அவர்களின் மடிக் கணினிகளில் பதிவேற்றம் செய்துதரும் திட்டமும் இன்று துவங்கப்படுகிறது.
இந்த 3 திட்டங்களையும் இன்று தலைமைச் செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார்

No comments:

Post a Comment