Wednesday, July 15, 2020
ஆடி மாத சிறப்பு
🥥🥥ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை !!!🥥🥥
🥥🙏தமிழ் நாட்டில் , ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி , தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம் !! இந்தப் பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது !!
🥥🙏அதர்மத்துக்கும் , தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று , "ஆடி-18’’ அன்று முடிவுக்கு வந்தது என்பது புராணச் செய்தி !!
🥥🙏இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள் !!
🥥🙏இந்த பூஜையின்போது , படைக்கும் வகையில் , இதுபோல் தேங்காய் சுட்டு , அதனைப் பிரசாதமாக படைத்து , வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது !!
🥥🙏ஆண்டாண்டு காலமாக , அந்த ஐதீகத்தை கடைபிடிக்கும் வகையில் , தென்னகத்தில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி ஆடி மாதம் முதல் நாளன்று , தேங்காய் சுடும் பண்டிகை சிறுவர், சிறுமிகளின் உற்சாகத்துடன் வீடுகள் தோறும் கொண்டாடப்படுகிறது !!
🥥🙏புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு , ஓடு மெலிதாகும் அளவுக்கு , அதை தரையில் தேய்ப்பார்கள் !!
🥥🙏ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தேய்க்கப்பட்டதும் , அதன் தலைப்பகுதியில் , ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த
தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும் !!
🥥🙏பின்னர் துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட, அழிஞ்சிமர குச்சியில் , அந்தத் தேங்காயை சொருகுவார்கள் !!
🥥🙏பின்னர் அந்தக் குச்சியை சுற்றி , மஞ்சளைப் பூசித் துளையை அமைப்பார்கள் !!. அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் , ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, [ அல்லது புதிய மண் அடுப்பில் நெருப்பு மூட்டி ] , அந்த நெருப்பில் குச்சியில் செருகப்பட்ட தேங்காயைக் காட்டிச் சுடுவர் !!
🥥🙏ஒரு குறிப்பிட்டப் பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின்
அதை அருகில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த கலவை உணவை உற்றார், உறவினர்களுடன் உண்டு மகிழ்வதும் வழக்கம !!
🥥🙏சிலர் வீட்டில் உள்ள சாமிப் படங்களுக்கு முன்பு படைத்து,
பூஜைகள் செய்துவிட்டு சாப்பிடுவார்கள் !! இப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும். ருசிப் பார்த்தவர்கள் இதனை உணர்வார்கள் !!
🌸முக்கியமானக் குறிப்பு :
----------------------------------------------
🌹இந்த ஆடி மாத முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகையின் போது வீட்டில் கருவுற்ற பெண்டிர் யாரேனும் இருந்தால் ,
தேங்காய் சுடும் நிகழ்வை அந்த வீட்டில் உள்ளோர் செய்ய மாட்டார்கள் !!
🥥🥠🍏🍎🍐🍊🍋🍇🍓🥠🥥
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment