அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன்.

Thursday, July 23, 2020

TC Apply. EMIS

→Click
TC ல் அடையாளங்கள் உள்ளிட்ட மாணவர்கள் விவரங்களை Update செய்து ( TC APPLY DATE & ISSUE DATE பதிவு செய்யாமல் ) Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும்.

மீண்டும் TC வழங்கும் போது TC APPLY DATE & ISSUE DATE பதிவுசெய்து Save செய்வது ஒரு முறை கணக்கில் கொள்ளப்படும். இவ்வாறாக இருமுறை மட்டுமே விவரங்களில் திருத்தம் செய்ய முடியும். அதன்பிறகு தவறுகளை திருத்த முடியாது. TOO MANY ATTEMPTS UNABLE TO EDIT DETAILS என வந்துவிடும்.

ஆகவே மாற்றுச்சான்று வழங்கும் மாணவர்களின் olu566 ( Terminal class - 5,8,10,12 & Others ) STUDENTS PROFILE ல் முதலில் சரிபார்த்த பிறகே TC விவரங்களை Update செய்ய வேண்டும்.கவனமுடன் செயல்படவும்.

Fit india

→Clickபிட் இந்தியா' இணையதளத்தில், அனைத்து பள்ளி விவரங்களும் உள்ளீடு செய்ய வேண்டுமென தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.உடற்பயிற்சி, விளையாட்டு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, 'பிட் இந்தியா' இயக்கத்தை மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகப்படுத்தியது. மேலும், இனி ஆண்டுதோறும் ஆக., 29ம் தேதி 'பிட் இந்தியா' தினமாக கொண்டாட அறிவுறுத்தியது.

இதுதொடர்பாக பள்ளிகள், கல்லுாரிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அதனை, www.fitindia.gov.in இணையதளத்தில் பதிவிட வேண்டும். இதன் அடிப்படையில் பள்ளி கல்லுாரிகளுக்கு தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து கல்வி நிறுவனங்களும் இவ்விணையதளத்தில் தங்கள் விவரங்களை, ஜன., 24க்குள் உள்ளீடு செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இருப்பினும் இதுவரை, குறைந்த அளவிலான பள்ளிகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளன. எனவே இதுவரை மேற்கண்ட இணையதளத்தில், பதிவேற்றம் செய்யாத பள்ளிகள், உடனே பதிவேற்றம் செய்ய, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளன.அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளும், www.fitindia.gov.in என்ற இணையதளத்தில் வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

#எத்தனை #வண்ணமடி-

#எத்தனை #வண்ணமடி- 

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

எத்தனை எத்தனை வண்ணமடி
எழிலாய் இயற்கையில் காணுதடி!

🎋#பச்சை நிறத்தில் பசும் புற்கள்
பனித்துளி தாங்கி வணங்குதடி!

🌨மேகம் சூழ்ந்த வானத்தின்
மேனி நிறமே #நீலமடி!

🍋சிட்ரிக் அமிலம் சுமந்திருக்கும்
சிறிய எலுமிச்சை #மஞ்சளடி!

🍅தகதக வென்று #சிவப்பாக
தக்காளிப் பழமே ஜொலிக்குதடி!

🍳ஏழுநிறத்தில் அடங்காத
எழில் தரும் கூந்தல் #கருமையடி!

🥛நிறமே இல்லாத் தண்ணீரோ
உறைந்தால் #வெண்மையாகுமடி!

🌈ஏழுநிறத்தின் கலவையிலே
எண்ணற்ற வண்ணம் தோன்றுதடி!

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

தஞ்சாவூர் பொம்மை
🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶

தஞ்சாவூர் பொம்மையாம்

தலையாட்டும் பொம்மையாம்

அடிபெருத்த பொம்மையாம்

ஆடி ஆடி ஓயுமாம்

தஞ்சாவூர் பொம்மையைத்

தள்ளிக் கீழே விட்டாலும்

தள்ளாடி ஆடுமாம்

தலைநிமிர்ந்து நிற்குமாம்

அழுதபிள்ளை வாய்மூட

அம்மாவுக்கு உதவுமாம்

அறிவியலைப் புகட்டிட

ஆசானுக்கும் உதவுமாம்!

சாய்ந்து சாய்ந்து ஆடியே

சரியாய்த் தானே அமருமாம்

சமநிலையைப் போதிக்க

சான்றான பொம்மையாம்.
🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶🤶

Wednesday, July 15, 2020

ஆடி மாத சிறப்பு

🥥🥥ஆடி மாதத்தின் முதல் நாளையொட்டி தேங்காய் சுடும் பண்டிகை !!!🥥🥥 🥥🙏தமிழ் நாட்டில் , ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாளையொட்டி , தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம் !! இந்தப் பண்டிகை கொண்டாடப்படும் நிகழ்ச்சி மகாபாரதக் கதையுடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது !! 🥥🙏அதர்மத்துக்கும் , தர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று , "ஆடி-18’’ அன்று முடிவுக்கு வந்தது என்பது புராணச் செய்தி !! 🥥🙏இந்தப் போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் வேண்டி அதற்காக விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்கிறார்கள் !! 🥥🙏இந்த பூஜையின்போது , படைக்கும் வகையில் , இதுபோல் தேங்காய் சுட்டு , அதனைப் பிரசாதமாக படைத்து , வழிபட்டதாக ஒரு ஐதீகம் உள்ளது !! 🥥🙏ஆண்டாண்டு காலமாக , அந்த ஐதீகத்தை கடைபிடிக்கும் வகையில் , தென்னகத்தில் ஆடி மாதப் பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஆடி மாதம் முதல் நாளன்று , தேங்காய் சுடும் பண்டிகை சிறுவர், சிறுமிகளின் உற்சாகத்துடன் வீடுகள் தோறும் கொண்டாடப்படுகிறது !! 🥥🙏புதிய தேங்காயை எடுத்து அதன் மேல் உள்ள நார்களை அகற்றிவிட்டு , ஓடு மெலிதாகும் அளவுக்கு , அதை தரையில் தேய்ப்பார்கள் !! 🥥🙏ஒரு குறிப்பிட்ட அளவுக்கு தேய்க்கப்பட்டதும் , அதன் தலைப்பகுதியில் , ஒரு கண்ணில் துளையிட்டு உள்ளே இருந்த தேங்காய் தண்ணீர் வெளியேற்றப்படும் !! 🥥🙏பின்னர் துளையிட்ட கண்ணின் வழியாக தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல், எள், ஏலக்காய் ஆகியவை கலந்த கலவையை இட்டு, நீண்ட ஒரு முனை கூராக சீவப்பட்ட, அழிஞ்சிமர குச்சியில் , அந்தத் தேங்காயை சொருகுவார்கள் !! 🥥🙏பின்னர் அந்தக் குச்சியை சுற்றி , மஞ்சளைப் பூசித் துளையை அமைப்பார்கள் !!. அதைத் தொடர்ந்து வீட்டு வாசலில் , ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, [ அல்லது புதிய மண் அடுப்பில் நெருப்பு மூட்டி ] , அந்த நெருப்பில் குச்சியில் செருகப்பட்ட தேங்காயைக் காட்டிச் சுடுவர் !! 🥥🙏ஒரு குறிப்பிட்டப் பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின் அதை அருகில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டிற்கு எடுத்துவந்து, அதை உடைத்து உள்ளே இருந்த கலவை உணவை உற்றார், உறவினர்களுடன் உண்டு மகிழ்வதும் வழக்கம !! 🥥🙏சிலர் வீட்டில் உள்ள சாமிப் படங்களுக்கு முன்பு படைத்து, பூஜைகள் செய்துவிட்டு சாப்பிடுவார்கள் !! இப்படி நெருப்பில் பக்குவப்பட்ட தேங்காயும் அதனுள்ளே இருக்கும் பூரணமும் மிகவும் சுவையாக இருக்கும். ருசிப் பார்த்தவர்கள் இதனை உணர்வார்கள் !! 🌸முக்கியமானக் குறிப்பு : ---------------------------------------------- 🌹இந்த ஆடி மாத முதல் நாள் தேங்காய் சுடும் பண்டிகையின் போது வீட்டில் கருவுற்ற பெண்டிர் யாரேனும் இருந்தால் , தேங்காய் சுடும் நிகழ்வை அந்த வீட்டில் உள்ளோர் செய்ய மாட்டார்கள் !! 🥥🥠🍏🍎🍐🍊🍋🍇🍓🥠🥥

Tuesday, July 14, 2020

கல்வி திட்டம்

நாளை முதல் தமிழக
கல்வித்துறையில் செயல்பட இருக்கும் மூன்று திட்டங்கள்..
முழு விவரம்..

வரும் கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு செல்லக் கூடிய அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன . இதற்காக 3 கோடிக்கும் அதிகமான பாடப்புத்தகங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன .

இந்த திட்டத்தை மாணவர்களுக்கு வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கி வைக்கிறார். அதேபோன்று கொரோனா நோய்பரவல் காரணமாக பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாத நிலை உள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தும் திட்டமும் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது .

மேலும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பாட பொருள்களை அவர்களின் மடிக் கணினிகளில் பதிவேற்றம் செய்துதரும் திட்டமும் இன்று துவங்கப்படுகிறது.
இந்த 3 திட்டங்களையும் இன்று தலைமைச் செயலகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார்

Monday, July 13, 2020

ABBREVIATIONS

 

 BEO - Block Educational Officer

 APO - Assistant Project Officer

 ALM - Active Learning Methodology

 SABL - Simplified Activity Based Learning

 SALM - Simplified Active Learning Methodology

 BRC - Block Resource Center

 BRTE - Block Resource Teacher Educator

 CEO - Chief Educational Officer

 CRC - Cluster Resource Center

 CAL - Computer Aided Learning 

 CCE - Continuous & Comprehensive Evaluation

 CWSN - Children With Special Need

 FA - Formative Assessment

 SA - Summative Assessment

 DEO - District Educational Officer

 DEEO -  District Elementary Educational Officer

 DEE - Directorate of Elementary Education 

 DSE - Directorate of School Education

 DGE - Directorate of Government Examinations

 DTERT -   Directorate of Teacher Education Research and Training

 DIET - District Institute of Education & Training

 DPEP - District Primary Education Programme

 DPO - District Project office

 DPI - Department of Public Instruction

 DISE - District Information System for Education

 EER - Elementary Education Register

 EMIS - Educational Management Information System

 IE - Inclusive Education

 JD - Joint Director

 JRC - Junior Red Cross

 KGBV - Kasturba Gandhi Balika Vidyalaya

 LSRW - Listening Speaking, Reading & Writing

 NMMS - National Means cum Merit Scholarship

 NCERT - National Council of Education Research & Training

 NSS - National Service Scheme

 NCC - National Caded Crops

 NCTE - National Council of Teacher Education

 NCPCR - National Commission for Protection of Child Rights

 NIC - National Informatics Centre

 NCF - National Curriculum Framework

 NUEPA -  National University of Educational Planning and Administration

 OSC - Out of School Children

 PINDICS - Performance Indicators

 PA - Periodical Assessment

 PTA - Parents Teachers Association 

 PET - Physical Education Teacher

 QMT - Quality Monitoring Tools

 RMSA - Rashtriya Madyamik Shiksha Abhiyan

 RTI - Right to Information

 RTE - Rights to Education

 RSTC - Residential Special Training Centre

 SSA -  Sarva Shiksha Abhiyan

 SPD - State Project Director

 SLAS - State Level Achievement Survey

 NAS - National Achievement Survey

 SLM kit - Self Learning Materials kit

 SVP - Swachh Vidyalaya Puraskar

 SCERT - State Council of Education Research & Training

SMC - School Management  Committee

UDISE - Unified District Information System for Education

UNICEF - United Nations International Children Education Fund

Sunday, July 12, 2020

கொரானோ

கோவை E S I   மருத்துவமனையில் 141/141 குணம் அடைந்து வீடு திரும்பினது எப்படி?

 *கொஞ்சம் கருப்பு மிளகு தூள், எலுமிச்சை சாறு, இஞ்சி துண்டு மூன்றையும் தண்ணீரில் கலந்து அந்த தண்ணீரை கொதிக்க வைத்து குடியுங்கள்.

 இதுபோல்  ஒருநாளைக்கு  2, 3 முறை குடித்து வந்தால் வைரஸ், பேக்டீரியா தொற்றால் நமக்கு எவ்வித பாதிப்பும் வராது.

 இஞ்சி, கருமிளகு, எலுமிச்சை சாறு மூன்றையும் நீரில் கலந்து அந்த நீரை கொதிக்க வைக்கும் பொழுது விசேஷமான ஒரு கெமிக்கல் ரியாக்க்ஷன் உருவாகும்.

 அந்த புதிய வேதியல் மாற்றம் எத்தகைய மோசமான வைரஸ், பேக்டீரியாவையும் கொன்று விடும். தினம், தினம் தனது மூலக்கூறு வடிவத்தை மாற்றிக் கொள்ளும் கொரோனா எனும் இந்த மாயாவியை எவ்வாறு? அழிப்பது என மருத்துவ உலகம் விழி  பிதுங்கி நிற்கிறது.

அத்தகைய இந்த கொரோனா மாயாவி  போல் எத்தனை  புதிய மாயாவிகள் எதிர்காலத்தில் வந்தாலும் அனைத்து மாய அசுரர்களையும் அழிக்கும்  மும்மூர்த்திகள் தான் இந்த இஞ்சி, மிளகு, எலுமிச்சை.

மேலும் கொரோனா போன்ற வைரஸ்களை அழிப்பதில் கபசுரத்தை காட்டிலும், நிலவேம்பை காட்டிலும் சிறந்தது  இந்த இஞ்சி, எலுமிச்சை, கருமிளகு குடிநீர்....*
 *இஞ்சி,மிளகு, எலுமிச்சை சாறு நீரை கொண்டு தான் கர்நாடகாவில் பெருமளவு கொரோனா நோயை கட்டுப்படுத்தினார்கள்.

உயர் தரமான மிளகு விளையும் கூர்க், மடிகேரி போன்ற ஊர்கள் எல்லாம் கர்நாடகாவில் தான் இருக்கு. நாமும் கன்னடர்கள் வழியை பின்பற்றி  கொரோனா எனும் மாய அசுரனை கொல்வோம்....*
இந்த பதிவை நீங்க ஷேர் செய்யலாம் இல்லை காப்பி பேஸ்ட் செய்யலாம்.என்ன வேணாலும் பண்ணலாம். இந்த செய்தி அணைத்து தரப்பு மக்களுக்கும் போய் சேரவேண்டும். குறைந்த பட்சம் சென்னையில் வாழும் அனைத்து மக்களுக்கும் இந்த தகவல் போய் சேரவேண்டும். காரணம் தமிழ்நாட்டிலேயே சென்னையில் தான் மிக மோசமான கொரோனா பாதிப்பு....
இந்த பதிவை எவ்ளோ facebook, வாட்ஸ் அப் குரூப்பில் நீங்கள் போஸ்ட் செய்ய முடியுமோ செய்யுங்கள்...
இஞ்சி, எலுமிச்சை, மிளகு மூன்றும் அணைத்து நாடுகளிலும் கிடைக்கும் பொருட்கள் தான். அதனால் இந்த  அருமையான, எளிமையான மருத்துவ குறிப்பு அனைத்து உலக நாடுகளுக்கும் போய்  சேர்ந்தால் அதன்மூலம் இந்த உலகை கொரோனாவில் இருந்து நாம் மீட்டு விடலாம்....கொ

14ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்

→Click

Monday, July 6, 2020

*எட்டு திருக்குறளை இந்த ஒரே பாடலில் எழுதி உள்ளார் கண்ணதாசன்* அந்தப் பாடல் ஆறு மனமே ஆறு இது ஆண்டவன் கட்டளை ஆறு என்ற இந்தப் பாடல் 1.தன்னெஞ்சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச்சுடும் (293) *ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி....* 2 .இன்பத்துள் இன்பம் விளையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.(629) *இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி...* 3. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்கு தன்சொலால் தான்கண் டனைத்து இவ்வுலகு.(387) *உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உயிர்கள் உன்னை வணங்கும்*. 4. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மானப் பெரிது. (124) *நிலைத் திரியும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னிடம் மயங்கும்.* 5. அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும் இழுக்காறு இயன்றது அறம். (35) *ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்.* 6அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு. (80) 7. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை சேய்நன்றி கொன்ற மகற்கு.(110) 8. கண்ணோட்ட மென்னும் கழிபெறும் காரிகை உண்மையா னுண்டிவ் வுலகு. (571) *அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..* கண்ணதாசன் திருக்குறளையும் விட்டு வைக்கவில்லை தனது பாடல்களில். இறைவன் அளித்த *ஈடிணையில்லாக் கவிஞன்.*